“அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம்.. நீண்ட காலம் அவரை சிறையில் அடைக்க முடியாது” - சுனிதா கெஜ்ரிவால் பேச்சு!
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம் எனவும், அவரை நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது.
- ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம்.
- ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளிகளை உருவாக்குவோம்.
- ஒவ்வொரு கிராமத்திலும், மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்குவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு அரசு மருத்துவமனை, அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
- விவசாயிகளுக்கு பயிர்களுக்கு சரியான விலை வழங்கப்படும்.
- டெல்லி மக்கள் 75 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். எனவே டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம்.
இந்த 6 உத்தரவாதங்களையும் நாங்கள் வருகிற 5 வருடத்தில் செய்து முடிப்போம். இந்தத் தருணத்தில் நான் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்” எனக் கூறி அந்தக் கடிதத்தையும் வாசித்துக் காட்டினார்.