பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்த பெண் புதிய வீடு கட்டி, புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார்.
அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த அப்பெண்ணின் உறவினராண ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மதுராஜா என்பவர் ராணுவத்தில் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் மதுராஜா ஊருக்கு வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
புதுமனை புகுவிழா பங்கேற்க சென்ற மதுராஜா குளியலறையில் ரகசிய கேமராவை பொருத்தி உள்ளார். பின்னர் அவர் மிசோரம் மாநிலத்துக்கு பணிக்கு சென்றுவிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பணியில் இருந்தவாறே கேமரா மூலம் லிங்க் செய்யப்பட்ட தனது செல்போனில் அவர் குளிப்பதை கண்டு ரசித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மதுராஜா சொந்த ஊருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்து தனது செல்போனில் உள்ள குளியலறை காட்சிகளை காண்பித்து, மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் மதுராஜா, அந்த காட்சிகளை நண்பர்கள் சிலரிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அந்த பெண் ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.