ஆம்ஸ்ட்ராங் கொலை - வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை சந்தித்தவர்கள் விவரங்கள் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் மற்றும் பிரபல ரெளடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் :ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர திருவிழா – அம்மனுக்கு 1,50,000 வளையல் அலங்காரம்!
இந்நிலையில், வேலூர் சிறையில் பிரபல ரௌடி நாகேந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் தங்களது விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் இருக்கும் நாகேந்திரனை கண்காணிக்க தனி காவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகேந்திரனை யாரெல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்த வீடியோ ஆடியோ பதிவை வைத்து ஆய்வு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு செல்லும்போது யாரை சந்தித்தார் என அவருடன் இருக்கும் காவலர் வைத்திருக்கும் சிறப்பு ரெக்கார்டிங் டிவைஸ் மூலம் தற்போது ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் வேலூர் சிறையில் பிரபல ரௌடி நாகேந்திரனுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.