ஆம்ஸ்ட்ராங் படுகொலை - தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு டிஜிபிக்கும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி உள்பட 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதன் எதிரொலியாக சென்னை கமிஷ்னரும் மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த கொலை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து பதில் அளிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தாமக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.