செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
10:05 PM Feb 11, 2025 IST | Web Editor
Advertisement
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,
Advertisement
“என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை”. என தெரிவித்தார். இது அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.