"நீங்க ரோடு ராஜாவா?" ஒரே வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தகவல்!
சென்னையில் "நீங்க ரோடு ராஜாவா?" என்ற திட்டத்தின் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 127 புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, "நீங்க ரோடு ராஜாவா" என்ற திட்டம் சென்னை போக்குவரத்து போலீசாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை விதிமுறைகளை பின்பற்றாதவர்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து @roaduh raja என்று டேக் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் போக்குவரத்து போலீசார் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : நாளை முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு | கல்வித்துறை முதன்மை செயலாளர் கடிதம்!
இந்நிலையில், "நீங்க ரோடு ராஜாவா?" என்ற திட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறியதாக பொதுமக்கள் 127 வாகன ஓட்டிகளை புகைப்படம் எடுத்து புகார் அளித்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பெறப்பட்ட புகார்களில் 81 புகார்கள் சரியானதாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நீங்க ரோடு ராஜாவா?" என்று டேக் செய்து வந்த புகார்களில் சாலை விதிகளை மீறியதாக 81 பேர் மீது அபராதம் விதித்து செலான் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.