"பிரதமர் மோடி கடவுள் இல்லை!" | #Aravindkejriwal சட்டசபையில் பேச்சு!
பிரதமர் மோடி கடவுள் இல்லை என டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து அவர் முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் டெல்லி முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். இந்நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், முதல் முறையாக டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்கள் : ‘லட்டு பாவங்கள்’ – பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழ்நாடு பாஜக புகார்!
அப்போது பேசிய அவர் தெரிவத்ததாவது:
"பிரதமர் மோடி சக்தி வாய்ந்தவர், நிறைய வளங்களைக் கொண்டவர். ஆனால் அவர் கடவுள் இல்லை. நான் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மணீஷ் சிசோடியாவையும் என்னையும் இங்கு பார்க்க வருத்தப்படுவார்கள். எனக்கு பதவி ஆசை இல்லை, 3 முறை பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னை சிறைக்கு அனுப்பி டெல்லியில் பணியை நிறுத்தினர். இது மட்டுமே அவர்களின் நோக்கம். இன்று டெல்லி பல்கலைக்கழக சாலையை முதலமைச்சர் அதிஷியுடன் ஆய்வு செய்தேன். சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். டெல்லியில் உள்ள பிற சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். டெல்லி மக்கள் கவலைப்பட தேவையில்லை"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.