For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

425 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
04:15 PM Feb 17, 2025 IST | Web Editor
தமிழ்நாடு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் 425 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை www.mrb.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பதவிகளுக்கு கணினி வழி அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 59 க்குள் இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் இளநிலை அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். மருந்தாளுநர்களுக்கு சம்பளம் ரூ.35,400 - ரூ.1,30,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களுக்கு www.mrb.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement