For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அன்னபூர்ணா விவகாரம் | லண்டனிலிருந்து மன்னிப்பு கோரினார் #Annamalai! 

02:06 PM Sep 13, 2024 IST | Web Editor
அன்னபூர்ணா விவகாரம்   லண்டனிலிருந்து மன்னிப்பு கோரினார்  annamalai  
Advertisement

அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பாஜகவினரின் செயலுக்காக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.

Advertisement

கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. அவர் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் மன்னிப்பு கோரினார். நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் அவர் தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை, மன்னித்துக் கொள்ளுங்கள் என பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே என காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமனுடன் அன்னபூர்ணா நிறுவனர் பேசிய வீடியோ வெளியானதற்கு மன்னிப் கோருகிறேன். வீடியோ வெளியிட்டதற்காக ஓட்டல் உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்தேன்.

சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளதார வளர்ச்சிக்கு பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், பாஜக யாரையும் மன்னிப்பு கேட்க சொல்லி கட்டயாபடுத்தவில்லை, சீனிவாசன் தாமாக முன் வந்து மன்னிப்பு கேட்டார், அதை யாரோ வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement