உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை - நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!
உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜன.19) விஜயவாடாவில் திறந்து வைக்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் உள்ள சுவராஜ் மைதானத்தில் உலகில் உள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான 206 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையின் உயரம் 125 அடியாக உள்ள நிலையில், அடி பீடம் 81 அடி உயரம்
கொண்டதாக கட்டப்பட்டு அதற்கு சமூக நீதிக்கான சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை திறந்து வைக்கிறார்.
Presenting the ‘Statue of Social Justice’.
The pride of Andhra Pradesh!
Join us on the 19th of January for the unveiling of this historic monument honouring Dr. BR Ambedkar.
A monument truly representative of the reformative social justice achieved in our government.… pic.twitter.com/ezGuMmNKcQ— YS Jagan Mohan Reddy (@ysjagan) January 17, 2024