For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அன்புமணி சமூக வலைதளங்களில் என் மீது கேவலமான விமர்சனங்களை வைக்கிறார்" - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி!

அன்புமணி நிறை பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11:29 AM Aug 07, 2025 IST | Web Editor
அன்புமணி நிறை பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 அன்புமணி சமூக வலைதளங்களில் என் மீது கேவலமான விமர்சனங்களை வைக்கிறார்    பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
Advertisement

திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் 5 லட்சம் மகளிர்கள் பங்கு பெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்கு வரும் மகளிர் பாதுகாப்பாக வரவேண்டும். அதேபோல் பத்திரிகையாளர்கள் அனைவரும் மாநாட்டிற்கு வரவேண்டும்.

Advertisement

அன்புமணி நிறை பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். அய்யா அய்யா என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று ராமதாஸ் என்று சொல்லுகிறார்கள். இதற்கு காரணம் அன்புமணி தான் - ராமதாஸ். அன்புமணி தைலாபுரத்தில் தன்னை சந்தித்ததாகவும் கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி தெரிவிக்கிறார் நான் ஏன் பேச மறுக்கிறேன். 46 ஆண்டு காலம் கட்டி காப்பாத்தி வைத்த கட்சியை அன்புமணியிடம் கொடுக்க வேண்டும் கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்க கூடாது என அன்புமணி தெரிவிக்கிறார்.

கட்சிக்கு அங்கிகாரம் இல்லை, சின்னமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி அங்கிகாரம் பெறவேண்டும் என்று சொல்லி நான் தலைமை ஏற்கிறேன் என கூறினேன். கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன், மக்கள் தன் மேல் உயிரை வைத்துள்ளார்கள். வர கூடிய சட்டமன்ற தேர்தலில் நான் தலைமை ஏற்று நடத்த முடிவெடுத்தேன். இதற்கு அன்புமணி முடியாது என கூறி நான் தான் வேட்பாளர் தேர்வு செய்வேன். நான் தான் கூட்டணி பேசுவேன் என அன்புமணி கூறியது தான் முதல் பிரச்சினை.

அதே போல் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்வேன் என கூறினார். என்னை அதிகாரம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிமாரம் உள்ளது. நிறுவனரான நான் தைலாபுரம் கேட்டை முடி கொண்டு கொள்ளு பேரன்கள் உடன் விலையாடி கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்கிறார்.

கடைசி மூச்சு வரை நான் என் பாட்டாளி சொந்தங்களை சந்தித்து கொண்டிருப்பேன். நான் கட்சியை பார்த்து கொண்டு வளர்கிறேன், நீ போய் மக்களை சந்தித்து வா என்று கூறினேன். என் பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக பார்க்க மாட்டார்கள், என்னை கடவுளாக பார்பார்கள், அப்படி பார்பவர்களை எல்லாம் அவர் இழுத்து கொண்டார். அவர்களிடம் தன்னால் தான் எம்.எல்.ஏ ஆக்க முடியும் என பல பொய்களை சொல்லி சேர்த்து வைத்துள்ளார்.

தருமபுரியில் அன்புமணியை எம்பி ஆக்கிய உடன் அவர் கட்சியை தன் பக்கம் மறைமுகமாக இழுக்கம் பணியில் ஈடுபட்டு வந்தார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. பணத்தை வைத்து பொறுப்பாளர்களை விலைக்கு வாங்குவது, கட்சி வளர்ச்சிக்கு எந்த கருத்து சொன்னாலும் கேட்பதில்லை. அன்புமணி மேல் நான் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னால் உருவான கட்சியை நான் அழிக்க விரும்பவில்லை. அதனால் தான் செயல் தலைவராக செயல் பட கூறுகிறேன். அன்புமணி கட்சிகாக எதுவும் செய்யவில்லை. கட்சியின் உள்ள பிள்ளைகளை, தம்பிகள், தங்ககைகள் எல்லோரையும் நான் நன்றாக வளர்த்தேன்.

குடும்ப பாசம் எப்படி இருக்குமோ அது போன்று கட்சியை வளர்த்தேன், வளர்த்து வருகிறேன். ஆனால் அவர் காசை கொடுத்து கட்சிகாரர்களை விலைக்கு வாங்குகிறார். பல கார்களை பின்னால் வர வைத்து ஊர் ஊராக சுற்றி வருகிறார். ஆனால் நான் அவரை வீடு, வீடாக கிராமம், கிராமமாக சென்று சந்தித்து வர கூறினேன் அதை அவர் செய்வதில்லை. நீங்கள் கேட்கலாம் அன்புமணி என்னை பொதுவெளியில் பேசுவது இல்லை என்று, ஆனால் அவர் அமைதியாக இருந்து நாடகம் நடத்தி வருகிறார்.

நான் பொது வெளியில் பேசுகிறேன் என கூறுகிறார்கள், ஆனால் நான் என் கட்டுக்கடங்காத மன குமுரல்களை நான் ஊடக நண்பர்களிடம் பகிர்கிறேன். எனது எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. ஆனால் அன்புமணி அமைதியாக இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் என்மீது கேவலமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கட்சி இரண்டாக இருப்பது போல் அன்புமணி ஒரு பிம்மத்தை உருவாக்கி வருகிறார். ஆனால் கட்சி ஒன்றாக தான் உள்ளது. 17 ஆம் தேதி கட்சியின் பொது குழு நடைபெறும். குடும்பம் 40 பேர் கொண்டதாக இருந்தது பத்தாக மாறியுள்ளது. குடும்பத்திற்குள்ளாகவே விளையாடி கொண்டிருக்கிறார். பொதுக்குழு அறிவித்தவுடன் போட்டியாக அன்புமணி பொதுக்குழு அறிவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement