Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் - அமைச்சர் தங்கம் தென்னரசு!

11:03 AM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுமென நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார். 

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கர்நாடகா மற்றும் ஒடிஸா மாநிலங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும். தமிழ்நாட்டின் தொல் மரபுகளை ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கீழடி உள்ளிட்ட மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். நாட்டிலேயே அகழாய்வுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
#MMKADMKBJPBudgetBudget 2024CongresscpicpimDMKedappadi palaniswamiEPSKMDKMDMKMK StalinNews7Tamilnews7TamilUpdatesPMKTamilnadu budgetTAMILNADU BUDGET 2024Thangam thennarasuTN Assembly 2024tvkVCK
Advertisement
Next Article