For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் - கன்னியாகுமரியில் பரபரப்பு!

08:53 AM Jun 04, 2024 IST | Web Editor
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர்    கன்னியாகுமரியில் பரபரப்பு
Advertisement

கன்னியாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஆயுதத்துடன் செல்ல முயற்சி செய்ததால், அந்த வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement

நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று நிறைவடைந்தது.  இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த நிலையில்  தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன்,  ஐபேட்,  லேப்டாக்,  ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அருகில் இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது” – “காலம் உள்ளவரை கலைஞர்” கண்காட்சியை பார்வையிட்ட பின் விஜய் ஆண்டனி பேட்டி!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் சிங் ன்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர் ராஜன் சிங், இடுப்பில் ஆயுதத்துடன் செல்ல முயற்சி செய்த நிலையில்,  காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அடையாள அட்டைகளை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, தான் சீக்கியர் என்றும் கத்தியுடன் செல்வேன் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது.

Tags :
Advertisement