Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்" - டிடிவி தினகரன் பேட்டி!

முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
03:32 PM Sep 14, 2025 IST | Web Editor
முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அரியலூரில் அக்கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாஜக கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும்? முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

விஜய்-பொதுமக்கள் சந்திப்பு குறித்த கேள்விக்கு, "விஜய் பிரச்சாரத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நிறைய இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதிற்கு உட்பட்டவர்கள் திரண்டு வந்திருந்தனர் என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜயின் பேச்சு இருந்ததா? என்ற கேள்விக்கு, நான் அதை அப்படி பார்க்கவில்லை. இருந்தாலும் அம்மா பாணியில் ஒருவர் பேசினால், அது மகிழ்ச்சியானது தான்.

பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, நள்ளிரவு தாண்டிய பிறகு ரத்து செய்து தான் ஆக வேண்டும்.

விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்ற கேள்விக்கு, அவர் தலைமையில் கூட்டணி உருவாகும் என பலமுறை சொல்லி விட்டேன். நீங்கள் அந்த கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் தலைமையில் ஒரு கூட்டணி சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் உண்டு. தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AriyalurEPSTamilNaduttv dhinakaranvijay
Advertisement
Next Article