Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“அமித்ஷா குறிப்பிட்டது தேசிய ஜனநாயக கூட்டணியை” - விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த நயினார் நாகேந்திரன்!

அமித்ஷா குறிப்பிட்டது அதிமுக - பாஜக கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
08:33 PM Jun 10, 2025 IST | Web Editor
அமித்ஷா குறிப்பிட்டது அதிமுக - பாஜக கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் தனித்தே ஆட்சி அமைக்கும் எனவும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை எனவும் கூறி வருகிறது. ஆனால் 2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என மதுரையில் அமித்ஷா பேசியுள்ளார். இது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் அமித்ஷா குறிப்பிட்டது அதிமுக - பாஜக கூட்டணி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்,

“உள்துறை அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி, எப்படி எல்லாம் பயணிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். திமுகவுக்கு எதிராக, திமுக கூட்டணிக்கு எதிராக எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு சொல்லி இருக்கிறார்.

அதனடிப்படையில் எங்களது பயண வியூகம் வெற்றிகரமான முறையில் அமையும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா குறிப்பிட்டது, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை; திமுக இருக்கக் கூடாது என்பதற்கான வியூகம். கூட்டணி அமைப்பதிலும், கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதா என்று கேள்விக்கு? எங்களுக்கு தொய்வு என்பது கிடையாது. வரும் காலமெல்லாம் வெற்றியான காலமாகத்தான் அமையப்போகிறது.

தேர்தலுக்கு பத்து மாதம் இருக்கிறது. எல்லோரும் ஓர் அணியில் திரள்வார்கள்” என தெரிவித்தார்.

Tags :
2026 Assembly ElectionADMKamit shahBJPedappadi palaniswaminainar nagendran
Advertisement
Next Article