பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!
நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர பாஜகவுடன் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் பாமக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இன்று (மார்ச் 19), திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பாஜகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீட்டை உறுதி செய்தனர்.
உறுதியானது பாமக - பாஜக கூட்டணி#BJP | #PMK | #Ramadoss | #AnbumaniRamadoss | #Election2024 | #Elections2024 | #ParliamentElection2024 | #LokSabhaElections2024 | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/FYUfvDTT2p
— News7 Tamil (@news7tamil) March 19, 2024
பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டது. பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தருமபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு#BJP | #PMK | #Ramadoss | #AnbumaniRamadoss | #Election2024 | #Elections2024 | #ParliamentElection2024 | #LokSabhaElections2024 | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/DL1CFVKMUH
— News7 Tamil (@news7tamil) March 19, 2024
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பத்தாண்டு காலமாக பாமக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளது. இந்த கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெரும். மோடி மிகப்பெரிய வெற்றி அடைவார்” என தெரிவித்தார்.