For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி!

03:45 PM Feb 03, 2024 IST | Web Editor
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்  விரைவில் அறிவிப்பு என ஜெயக்குமார் பேட்டி
Advertisement

"கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது... விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

Advertisement

அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அண்ணாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

"அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அண்ணாவின் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தினோம்.  அண்ணாவின் கொள்கையை கடைபிடிக்காமல் அதற்கு நேர்மாறாக அவரது கொள்கையை பேணிக் காக்காமல் மாநில உரிமைகளை எல்லாம் திமுக விட்டு கொடுத்திருக்கிறது.  அண்ணாவின் பெயரை சொல்வதற்கு திமுக-விற்கு எந்த தகுதியும் இல்லை.

தேர்தல் நெருங்கக் கூடிய சூழலில் ஏற்கனவே அனைத்து பணிகளும் பொதுச் செயலாளர்
தலைமையில் இளைஞர் அணி பாசனை பிரச்சாரக் குழு தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட
அனைத்து குழுக்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன.  கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இன்னும் தேர்தல் வர ஒரு மாதமே
உள்ள சூழலில் விரைவில் கூட்டணி குறித்து அறிவித்து வெளியிடப்படும்.

இதையும் படியுங்கள்: “உயிருடன் தான் இருக்கிறேன்” – வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பூனம் பாண்டே!

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை
தொடங்கி இருப்பதற்கு காரணம் அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறிவிடும் என்ற பயம் தான்.  கூட்டணி பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் எந்த பயமும் கிடையாது.  ஏனெனில் திமுக ஆட்சியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதை பார்த்து தான் தேர்தலில் மக்கள் முடிவு வழங்குவார்கள்.

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.  பாஜகவை நாங்கள் தொடர்ந்து
விமர்சித்து வருகிறோம்.  எங்களைப் பொறுத்தவரை முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம்.  அதிமுக தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது,  பூத் கமிட்டி பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement