“பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பு, தமிழ்நாட்டில் ராமபிரான் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று வந்தது ஆன்மீகப் பணி சார்ந்ததாக உள்ளது. மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் கூட்டணி தொடர்பாக தமாகா உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும்.
2024 தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றை அதிகப்படுத்தியுள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் எதிரணி சார்ந்த ஆட்சி நடைபெற்று வந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல், கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்” இவ்வாறு வாசன் தெரிவித்தார்.