பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு நேற்று(ஏப்ரல்.23) அறிவித்தது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நாட்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தி.மு.க, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சில நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.