துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி..!
நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய அணியினர் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர். இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி, நடிகர் அஜித் குமார் அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித்குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் ரேசிங் அணி வெளியிட்டுள்ள செய்தியில்,
"தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.