அஜித் குமார் கொலை வழக்கு - புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வழக்கை சி.பி.ஐ. தற்போது கையில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால், நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, சிவகங்கை மாவட்ட காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவப்பிரசாத் இன்று பொறுப்பேற்றுள்ளார் அஜித் குமார் கொலை வழக்கில் ஏற்கனவே சில காவலர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சி.பி.ஐ.யின் தீவிர விசாரணையின் காரணமாக, இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள சிவப்பிரசாத், இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.