"அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தில் உரையாற்றினார். அப்போது, "எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு மழை பெய்தாலும் அதிமுக வெற்றி பெற காத்திருப்பவர்களுக்கு நன்றி.
கலை அறிவியல் கல்லூரியை மலைவாழ் மக்கள் பயன்பெற கொண்டு வந்தோம். நானும் விவசாயி என்பதால் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். நிறுத்தப்பட்ட லேப்டப் வழங்கப்படும். 7.5 இடஒதுக்கீடு மருத்துவ கல்வி ஏழை மாணவர்களுக்கு கொடுத்த அரசு அதிமுக. அம்மா இருசக்கர வாகனம் அதிமுக ஆட்சி வந்த பின் வழங்கப்படும்.
கொரோனோ காலத்தில் நிவாரண தொகை வழங்கியது. மாணவர்கள் ஆல்பாஸ், ஆன் லைன் வகுப்பு கொடுத்தது அதிமுக சாதனை, விலை வாசி உயர்வை அதிமுக ஆட்சியில் கட்டுப்படுத்தினோம். அரிசி, பருப்பு விலை திமுக ஆட்சியில் உயர்ந்து விட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்தியாவில் அதிக கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு அதிமுக ஆட்சியில் தான். 11 மருத்துவமனை அமைத்தோம், நாமக்கல்லில் சட்டக்கல்லூரி, கூட்டுகுடிநீர் கொண்டு வந்தது. அதிமுக பொற்கால ஆட்சி. திமுக அவல ஆட்சி, அனைத்துக்கும் வரி போட்டது.
கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தினார்களா? கேஸ் விலை குறைத்தார்களா? ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு நிறைவு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்று தெரிவித்துள்ளார்.