For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்!

11:50 AM Aug 16, 2024 IST | Web Editor
அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
Advertisement

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும் போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம் ஜி ஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

  • நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றிகள். வெற்றிக்காக அயராது பாடுபட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.
  • நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.
  • விலையில்லா வேட்டி சேலை வழங்குவதிலும் விலையில்லா பள்ளி சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசுக்கு கண்டனம்.
  • மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்யவும் மாதாந்திர மின்கட்டண கணக்கிட்டு முறையை அமல்படுத்தவும் திமுக அரசை வலியுறுத்தல்.
  • தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற தவறிய திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கண்டனம்.
  • மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முடக்கி செயலிழக்க செய்து வரும் திமுக அரசுக்கு கண்டனம்.
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம் மீனவர்கள் மணலில் அக்கறை செலுத்தாத திமுக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்
  • மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும் போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்
  • மருத்துவ காப்பீடு பிரிமியத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்
  • வயநாடு நிலசரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி கண்டனம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான திமுக அரசுக்கு கடும் கண்டனம்
  • தொழில் வளர்ச்சி குன்றியதற்கு காரணங்களை அறிந்து அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்
  • நிர்வாக திறமையின்மை காரணமாக கடன் மேல் கடன் வாங்கையும் வறுமையில் வரி விதித்தும் மக்களை கடனாளியாக்கியதுதான் திமுக அரசின் சாதனை. திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி அல்ல வேதனை ஆட்சி.
  • எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வகுத்து தருகின்ற தேர்தல் படி வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் 2026 சட்டமன்ற பொது தேர்தல்களிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில் கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிக்க சூளுரை ஏற்போம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tags :
Advertisement