தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
10:49 AM Apr 16, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
இதற்கு சபாநாயகர் அப்பாவு, விவாதத்திற்கு எடுக்க எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருக்கிறார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசி வருகிறார்.
Next Article