For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

07:51 PM Jan 07, 2024 IST | Web Editor
அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது   எடப்பாடி பழனிசாமி பேச்சு
Advertisement

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே எஸ்டிபிஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாநாட்டின் கொடியினை மாநில தலைவர் நெல்லை முபாரக் ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து எஸ்டிபிஐ கட்சியினர் பங்கேற்றனர். எஸ்டிபிஐ கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’ மாநாட்டில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழ்நாடு முழுதும் இருந்து 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி கே.பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

”எஸ்டிபிஐ கட்சியின் மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணி மதச்சார்பின்மையை கடைபிடித்து வருவதாக போலி பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். அதிமுக கிளை செயலாளராக இருந்து தவழ்ந்து உயர் பதவிக்கு வந்துள்ளேன். என்னுடைய வளர்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

அதிமுக சிறுபான்மையினரை அரண் போல காத்து வருகிறது. 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது. திமுக மக்களை பற்றி கவலைப்படவில்லை. குடும்பத்தினருக்காக திமுக கூட்டணி வைத்துள்ளது. கடந்த காலங்களில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது.தொழில் முதலீட்டு மாநாடுகள் வாயிலாக எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

திமுக மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. அதிமுக ஒரு நாளும் கொள்கைகளை விட்டு கொடுக்காது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டணியில் இருந்து வெளியே வந்த போதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவையும், பாஜகவையும் தொடர்புபடுத்தி பேசி வருகிறார். நாலரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன்.

அதிமுகவுக்கு எதிராக வாக்கு அளித்த போதும் அதிமுக ஆட்சி நிலைத்து நின்றது. எதிராக வாக்களித்தவரையும் சமாளித்து தான் அதிமுக ஆட்சி நாலரை ஆண்டுகள் நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியோடு அதிமுகவுடன் நிறைய கட்சிகள் வர உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement