Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக தலைமை அலுவலக வன்முறை நிகழ்வு! முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:32 PM Nov 28, 2023 IST | Web Editor
Advertisement

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தபோது,
ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புகுந்த ஒபிஎஸ் தரப்பினர்
அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், வாகனங்களின் பதிவு புத்தகங்கள், கணினி உள்ளிட்டவற்றை சூறையாடி சென்றதாக, இபிஎஸ் தரப்பில் அளித்த புகாரில்
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, அன்றைய தினம் அதிமுக அலுவலகம் சென்ற தங்களை எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் குண்டர்கள் தங்களை தாக்கியதாக ஒ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி. பிராபகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், தி.நகர் சத்தியா உள்ளிட்டோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி ஜெ.சி.டி. பிராபகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜெ.சி.டி. பிராபகர் புகார்
தொடர்பாக விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் இரண்டு வாரங்களில் உரிய
நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
ADMKAIADMKEPSHigh courtnews7 tamilNews7 Tamil UpdatesOPSTN Police
Advertisement
Next Article