For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கச்சத்தீவை மீட்கட்டும் ...பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம் - சீமான் பேட்டி!

கச்சத்தீவை மீட்ட பின் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
04:07 PM Apr 03, 2025 IST | Web Editor
கச்சத்தீவை மீட்கட்டும்    பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்   சீமான் பேட்டி
Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய 16 பேர் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்த 16 பேரின் 105வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருங்காமநல்லூரில் உள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் அகில இந்திய பார்வட் ப்ளாக், பாரதிய பார்வட் ப்ளாக் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

"ஜாலியன் வாலாபாக் படுகொலை சுட போகிறார்கள் என தெரியாமல் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டது வரலாறாக உள்ளது. ஆனால் பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்கள் சுட்டு விடுவார்கள் என தெரிந்தே போராடி உயிர் தியாகம் செய்தது, வரலாற்றில் துளி செய்தியாக கூட இல்லை. வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டு உள்ளோம்.

தமிழ்த்தேசிய அரசு அமைந்தால் பெருங்காமநல்லூரில் சுடப்பட்ட 16 பேரில் ஒருவரான மாயக்காள் பெயரில் மகளிர் கல்லூரி தொடங்கப்படும், பூலித்தேவன், வேலுநாச்சியார் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள், தேவர் இன வாக்குகள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையாலே புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கச்சத்தீவு கடலுக்கு நடுவில் உள்ள ஒரு தீவீல் தண்ணீர் இல்லை என கூறும் செல்வப்பெருந்தகையின் பேச்சு வேடிக்கையாக உள்ளது. தண்ணீர் இல்லை கொடுத்தோம் என சொல்கிறார்கள், கை வைத்து தோண்டினாலே தண்ணீர் வந்துவிடும், இது தான் காரணமா?

கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகளும் நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் கோயில் திருவிழா நாடகம் நடைபெறுவது போல இதனை அரங்கேற்றி வருகின்றனர். 46 ஆண்டுகள் மூக்கையாதேவருக்கு மணிமண்டபம் கட்டாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள். தேர்தல் நேரம் என்பதால் இன வாக்குகளை குறிவைத்து மணிமண்டபம் கட்ட அறிவித்துள்ளது திமுக.

வாக்கை பறிக்க தற்போது கச்சத்தீவு தீர்மானம் என நாடகம் நடத்தி வருகிறார்கள். 18 ஆண்டுகள் இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த ஒரு மாநிலக் கட்சி திமுக. வாஜ்பாய், விபி சிங், தேவகவுடா மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் தீர்மானம் நிறைவேற்றி கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் திமுக எடுக்காமல் இப்போது தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி மீனவர் பிரச்சனைக்காக தொடர்ச்சியாக போராட்டங்கள் மீனவர் படுகொலையின் போது அந்த மக்களை சந்தித்து பேசி உள்ளது. அதன் விளைவாக மீனவர் வாக்கு நமக்கு கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் தற்போது தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படி கச்சத்தீவை மீட்கட்டும் நாங்கள் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து இந்துக்களின் வாக்குகளை குவிப்பதற்காக இதுபோன்ற நிலைப்பாட்டை பாஜக கையில் எடுக்கிறது. வஃக்பு நிலத்தில் என்ன பிரச்சனை உள்ளது.

ஜாகிர் உசேன் கொலை வக்பு வாரிய நிலம் தொடர்பாக நடந்ததுதான்.ஒரு தரப்பு மக்களின் வாக்கை குவிப்பதற்காக இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பது இந்த நாட்டின் ஒற்றுமைக்கு சரியாக இருக்காது. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை உணர்ந்து ஒரு தரப்பு மக்களின் வாக்கை குவிக்க போராடுவது இந்த நாட்டின் இறையாண்மை ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement