Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

20 தொகுதிகளுக்கான நேர்காணலை நிறைவு செய்த அதிமுக!

06:09 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் 20 தொகுதிகளுக்கான நேர்காணலை அதிமுக நிறைவு செய்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி மற்றும் கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளோருக்கான நேர்காணல், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிமுக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் இன்று காலை தொடங்கியது.  அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று 20  தொகுதிகளுக்கும் நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்றது.  20 தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு நாளை நேர்காணல் நடைபெறும் என தகவல்

Tags :
AIADMKEdappadi palanisamyElection2024EPS
Advertisement
Next Article