#AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!
04:12 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement 
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement 
கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐ போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதே வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  
  
  
  
  
 