அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு - இடம்பெறாத செங்கோட்டையன் பெயர்!
2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதை கண்காணிப்பது மற்றும் கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, அதிமுக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, அதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை . அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.