For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக" .... "ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
12:47 PM Aug 30, 2025 IST | Web Editor
ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 ஒரே மேடையில் அதிமுக  பாஜக  தேமுதிக        ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்    தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Advertisement

சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.முப்பனாரின் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ரவி பச்சமுத்து, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல் கே சதீஷ் உள்ளிட்ட மலர் மரியாதை செலுத்தினர்.

Advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்வதாக கூறுகிறார். ஆனால் முதலீடுகளை ஈர்ப்பது பிரதமர் மோடி தான். பாரதப் பிரதமர் உலக அளவில் நமது பாரதத்தை உயர்த்தி உள்ளதால் தான் தமிழ்நாட்டிற்கும் முதலீடு கிடைக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதல்வரே வெளிநாடு செல்லும் அவசியம் இருக்கும் போது பிரதமர் வெளிநாடு செல்வதற்கு அவசியம் இருக்காதா என கேள்வி எழுப்பினார். மேலும் எல்லா உயர்வுக்கும் பிரதமர் மோடி தான் காரணம் என தமிழக முதலமைச்சர் அறிய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது உள்ள திமுக அரசை தோற்கடிக்க வேண்டும்.

மூப்பனார் பிரதமர் ஆவதை பலர் தடுத்தனர். அப்துல்காலம் பிரதமர் ஆவதை தடுத்தார்கள், தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் வருவதை திமுக விரும்பவில்லை, தமிழருக்கு திமுக ஆதரவு அளிக்காததில் இருந்தே இவர்களது பொய் முகம் கிழிக்கப்பட்டுள்ளது. ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும். ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement