என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை துவங்கினார்.
வேளாண் பட்ஜெட்டில் முக்கனி மேம்பாட்டு திட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.
இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன் பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144 பக்கம் நிதி நிலை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை துண்டு அணிந்து வருகை தந்தனர். காலை 10 மணியளவில் உரையை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்ற திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட் உரையை துவங்கினார்.
வேளாண் பட்ஜெட்டில் முக்கனி மேம்பாட்டு திட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
மாம்பழம்:
தென்னாட்டு மா இரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த LDIT இரகங்கள் பரப்பினை விரிவாக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம் வழங்கவும், கிளை மேலாண்மை பயிற்சியளிக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் ரூ. 27.48 கோடி நிதி ஒதுக்கீடு.
வாழை:
ரூ. 12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம், வாழைத்தார் உறைகள் வழங்க மானியம்.
பலாப்பழம் :
உள்ளூர், புதிய இரகங்களின் சாகுபடி, சாகுபடித் தொழிநுட்பங்கள் குறித்த பயிற்சி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ. 1.14 கோடி நிதி ஒதுக்கீடு