For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராஜஸ்தானை தொடர்ந்து தெலங்கானாவில் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர்கள்!

08:37 PM Nov 24, 2023 IST | Web Editor
ராஜஸ்தானை தொடர்ந்து தெலங்கானாவில் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் தலைவர்கள்
Advertisement

ராஜஸ்தானை தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி தீவிர அரசியல் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளனர்.

Advertisement

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவ.30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கார்கே, பிரியங்கா அதனைத்தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் தனது அரசியல் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோர் தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி நான்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளனர். தென் மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் சட்டமன்றத் தொகுதியில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே உரையாற்றுகிறார். தெலங்கானா பாலகுர்த்தி பகுதியில் காலை 11.30 மணிக்கு பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு மற்றொரு கூட்டத்தில் பிரியங்கா உரை நிகழ்த்துகிறார். பின்னர் 2.30 மணிக்கு கொத்தகுடம் பகுதியில் மூன்றாவது பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பிரசாரம் முடிவடைய இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கார்கே, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் தென் மாநிலத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காகப் பிரசாரம் செய்து வருகின்றனர். மாநில மக்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்து, தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ்  வெற்றிபெற தீராத முயற்சி செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement