For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

01:42 PM Feb 12, 2024 IST | Web Editor
17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம்   ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Advertisement

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

தேவகோட்டை அருகே கண்டதேவியில்,  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.  தென்னிலை,  உஞ்சனை,  செம்பொன்மாரி,  இறகுசேரி பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் இந்த கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத் திருவிழாவாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

இதையும் படியுங்கள் ; டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

இதையடுத்து,  தேர் வடம்பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால்  2006 ஆம் ஆண்டிற்கு பின் தேரோட்டம் நடைபெறவில்லை.  தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர்,  தேர் பழுதானதாகக் கூறி தேரோட்டத்தை நடத்தவில்லை.  இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யப்பட்டது.  ஆனால், தேரோட்டம் நடத்தப்படவில்லை.

இதுகுறித்து மகா. சிதம்பரம் என்பவர் தொடர்ந்த வழக்கில்,  தேரோட்டம் நடத்த உயர்நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  ஆனால், கொரானா பெருந்தொற்றால் தேரோட்டம் தள்ளிவைக்கப்பட்டது.  இதையடுத்து,  மகா.சிதம்பரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  அப்போது, இந்தாண்டு ஜன.21 ஆம் தேதி தேர்  தேரோட்டம்  நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால்,  அப்போது பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்ததால்,  தேரோட்டம் பிப்.11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.  அதன்படி, நேற்று முன்தினம் இரவு தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று அதிகாலைகொடிமரம் முன் 2 கலசங்களை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், காலை 6.30 மணிக்கு தேர் தேரோட்டம் நடைபெற்றது.

இதற்காக விரதமிருந்த தேவஸ்தான ஊழியர்கள்,  பாரம்பரிய முறைப்படி இடுப்பில் துண்டு கட்டி,  வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில்,  தேரோட்டத்தையொட்டி,  ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  மேலும், 6 இடங்களில் 18 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

Tags :
Advertisement