மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா - இபிஎஸ் மரியாதை!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவச்சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதையும் படியுங்கள் : டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தபின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுவது போல அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்பாட்டில் தயாரான 76 கிலோ கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.