For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை ராஷ்மிகாவின் ‘Deep fake’ வீடியோ விவகாரம்: 5 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!

10:29 AM Nov 11, 2023 IST | Web Editor
நடிகை ராஷ்மிகாவின் ‘deep fake’ வீடியோ விவகாரம்  5 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
Advertisement

நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், 5 பிரிவுகளின் கீழ், டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அண்மையில் இவரது முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியானது என்பதை கண்டறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கண்டனக் குரல்களை எழுப்பினர். இதையடுத்து DeepFake எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான விமர்சனங்கள் பல எழுந்தன. இந்தியாவில் DeepFake-ஐ கையாள்வதற்கான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

DeepFake வீடியோ தொடர்பாக வேதனையை நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது X தள பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃப்-ன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. 

அந்த நோட்டீஸில், “இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த பிரச்னையின் தீவிரத்தை புரிந்துகொண்டு,  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் நவம்பர் 17-ம் தேதிக்குள் இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமர்பிக்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement