Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங். அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம்! நடிகர் விஜய்க்கு தனிக் கட்சி எதற்கு? - ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

05:16 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் காங்கிரஸ் அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம்; தனிக் கட்சி எதற்கு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வினா எழுப்பியுள்ளார்.

Advertisement

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிரணி நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுவிலக்கு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பதில்கள் பின்வருமாறு:

மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது, முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை. மதுகடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும், சாராயம் குடித்து பழகியவர்கள் 80%பேர் அடிமையாக உள்ள நிலையில் சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் உடல்நிலை கெட்டு போய்விடும். கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும். மது விலக்கு என்று சொல்லும் குஜராத், பீகார் மாநிலத்தில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருக்கிறது. மது விலக்கு செய்வதற்கு முதலில் மக்கள் திருந்த வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் தலைமையிலான நல்ல ஆட்சி அமையும் சூழல் அமைந்துள்ளது.

அதிமுக ஓட்டு வங்கி விஞ்ஞான ரீதியாக இபிஎஸ் 10% சரிந்ததுள்ளது என்று சொல்கிறார். ஆனால் 30% வாக்கு வங்கி அதிமுகவில் இல்லை. அதிமுக தொண்டர்கள் 80% கட்டுகோப்பாக இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு காரணமாக வாக்கு வங்கி சரிந்து கொண்டே வருகிறது.

நடிகர் விஜய்யை என் மகனாக பார்க்கிறேன். அவருக்கு சொல்வதென்றால் இப்போது எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில் சின்ன வட்டத்தை போட்டுக் கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார்கள்? நடிகர் விஜய் முதலில் எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார்? காங்கிரஸ் பேரியக்கம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் உலக வல்லரசு நாடாக இந்தியா வலிமை பெற வேண்டும் என்ற கொள்கையில் தொடங்கப்பட்டது. அதே வழியில் தமிழ் மொழி வாழவும் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற வேண்டும், இந்தி திணிப்பு கூடாது என்பதற்காக தான் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு மூலக்கரு உள்ளது. ஆனால் இதெல்லாம் விஜய்க்கு புரியவில்லையோ? நடிகர் விஜய் கொடியை அறிவித்த நிலையில் கொடியில் சொல்ல வருவது என்ன? இரண்டு யானைக்கு என்ன விளக்கம் என்று சொல்லவில்லை. கொள்கைகள் அறிவிக்காமல் சொல்லாமால் எப்படி மாநாடு நடத்தப்படுகிறது? பதவி மீது ஏதாவது ஆசை இருந்தால் வெளிப்படையாக சொல்லிவிட்டு செல்ல வேண்டிய தானே?

நீட் தேர்வை எதிர்க்கக் கூடியவர், பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட வேண்டும் தானே? நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரசிலும் திமுகவிலும் இருக்கும் நிலையில் எது பிடித்தததோ அதில் இணைந்து விட வேண்டியதானே? எதற்காக தனி ராஜ்யம்?

விவசாயிகள் நலம்பெற வேண்டும் என்றால் கள்ளுக்கடை திறப்பதில் தவறில்லை. கமல்ஹாசன், டி ராஜேந்தர், கருணாஸ் ஆகிய எல்லோரும் ஆரம்பித்து வீட்டுக்கு போய்விட்டார்கள். அதனால் நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று. எனக்கு அவருடைய நடிப்பை விட டான்ஸ் பிடிக்கும்.

ஆளுநர் வரலாறு தெரியாமல் நாள்தோறும் பேசி வருகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசு தான். உதயநிதி துணை முதல்வர் விவகாரத்தை பொறுத்தவரை இந்திய முழுவதும் குடும்ப அரசியல் உள்ளது. திறமை, உள்ள போது அவருக்கு அங்கீகாரம் அளிப்பதில் தவறில்லை. அனுபவம் என்பது மாதம், நாள் கணக்கில் வருவது இல்லை. ஒரு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறார்களோ அது தான் அரசியலில் தேவை. இந்திராகாந்தி பிரதமராக வரும்போது எல்லாம் விமர்சனம் எழுந்தது. ஆகையால் வாய்ப்பு வரும்போது திறமையாக செயல்படக்கூடியவர்கள் யார் வந்தாலும் வரவேற்க வேண்டுமே தவிர அவர்களை கொச்சைப்படுத்த கூடாது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Tags :
CongressDMKEVKS Elangovannews7 tamiltvkTVKVijay
Advertisement
Next Article