Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் - பிரபலங்கள் வாழ்த்து !

01:10 PM Dec 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement

நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகிய அவர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்ததோடு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவரது உழைப்பு மற்றும் திறமையினால் ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தொடர்ந்து 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர் ஆக மாறினார். 50 ஆண்டுகால சினிமா அனுபவம், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற விருதுகள் என புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் இன்று அவரது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என கூறியுள்ளார்

தவெக தலைவர் விஜய் வாழ்த்து :

இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தனது எக்ஸ் தளத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து :

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக, நீடு வாழ்க!” என எக்ஸ் தலத்தில்பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து :

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் தலத்தில் "தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் , இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
AnnamalaiBirthdayMKStalinRajinikanthsuperStarVIJAIYEDAPADIPALANISAMY
Advertisement
Next Article