கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
01:47 PM Oct 17, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு முழுவதும் பரவலா மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
இந்த நிலையில் கடலூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.