For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'மிக்ஜாம்' புயல் எதிரொலி - நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

09:36 PM Dec 03, 2023 IST | Web Editor
 மிக்ஜாம்  புயல் எதிரொலி   நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை(டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில்,  டிசம்பர் 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை  டிசம்பர் 4 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும், தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags :
Advertisement