பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் - டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடல்!
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகம் செல்லும் மெட்ரோ நிலையம் மூடப்படுப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில், “நான் உள்பட மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர். தற்போது எனது உதவியாளரையும் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா, அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி” என தெரிவித்தார்.
டிடியு மார்க், ஐபி மார்க், மிண்டோ சாலை மற்றும் விகாஸ் மார்க் போன்ற சாலைகளை தவிர்த்து அதற்கேற்றவாறு பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.