For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!

08:09 AM Feb 20, 2024 IST | Web Editor
மேற்கு வங்கத்தில் sc st obc பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து   பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்
Advertisement

மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR போன்றவை குறித்த விவாதங்கள் மீண்டும் எழ தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று  கூறினார்.  இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் இதற்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள பழங்குடி , பட்டிலின மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆதார் அட்டைகள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது முதல் முக்கியமான ஆவணமாக ஆதார் விளங்கி வரும் நிலையில் திடீரென ஆதார் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://x.com/MamataOfficial/status/1759549462899290326?s=20

ஆதார் ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..

மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆதார் அட்டைகளை முடக்கம் செய்துள்ளதற்கான காரணங்கள் என்ன?

இது பயனாளிகளின் சலுகைகளை பறிக்கவா அல்லது மக்களவை தேர்தலுக்கு முன்னர் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையா? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதில், நேரடி விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் தனிநபர்களின் ஆதார் அட்டைகளை முடக்கம் செய்வதற்கான கடிதங்களை வழங்கி வருகிறது. ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் நடவடிக்கையால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மக்கள் இடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களுடைய பிரச்னையை நிவர்த்தி செய்து தரும்படி மாவட்ட நிர்வாகத்தை அணுகி வருகின்றனர் ” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்குவங்கத்தில் அரசின் நலத் திட்டங்களை ஆதார் அட்டைகள் இல்லாமலும் பெற்றுக் கொள்ளலாம் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக UIDAI  அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ ஆதார் அட்டைகள் மூலம் ஏராளமான மானியங்கள், பலன்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்களை பெறப் பயன்படுகிறது, ஆதார் தரவுத்தளத்தின் துல்லியத்தைப் பராமரிக்கவும் ஆவணங்கள் மற்றும் ஆதாரை புதுப்பிப்பதற்கான முற்சியில் UIDAI ஈடுபடத்  தொடங்கியுள்ளது.  ஆதார் தரவுத்தளத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் போது, ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக, எந்த ஆதார் எண்ணும் ரத்து செய்யப்படவில்லை" என்று UIDAI தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement