கடலில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு... மீன் பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் இன்று (மே 4) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சைந்தவன் (19) உள்ளிட்ட 4 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. அவர்கள் தங்களுக்கு தேவையான மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள் : ‘Gem-ங்க’… திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை… மணமகளை கையில் ஏந்தி அக்னியை வலம் வந்த மணமகன்… சினிமா பாணியில் நடந்த சம்பவம்!
அப்போது, கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் படகில் இருந்த சைந்தவன் கடலில் தவறி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் இளைஞரை தேடும் பணியின் இறங்கினர். எங்கு தேடியும் இளைஞர் கிடைக்கவில்லை. இதனையடுத்து மீனவர்கள் கரை திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், உயிரிழந்த நிலையில் சைந்தவனின் உடல் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து நகர காவல் நிலையத்திற்க தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சைந்தவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.