திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றிய இளைஞர்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள தெக்களூர் ஊராட்சியில் இளைஞர் இன்பராஜ் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணியில் பிரபல மருந்தகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் ஆர்.கே. பேட்டை தாலுகாவில் உள்ள செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த சிந்து (22) என்ற இளம் பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இப்பெண் சுங்குவார்சத்திரம் தனியார் கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இன்பராஜ் அந்த பெண்ணிடம் தான் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறி ரூ.1 லட்சம் பணத்தை பெற்றிருக்கிறார்.
பின்னர் இன்பராஜ் திடீரென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனை அறிந்த சிந்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்பராஜ் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.1 லட்சம் பணத்தை பெற்றுவிட்டு ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார்.
இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இன்பராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.