Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சினிமா பாணியில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் - தட்டி தூக்கிய போலீசார்!

10:35 AM May 08, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசி ஆள் மாறாட்டம் செய்து பல நபர்களிடம் பணம் பறித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கன்னியாகுமரியைச் சேர்ந்த ரவி என்பவர் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஈரோடு,  திருப்பூர்,  கோவை பகுதிகளில் உள்ள முக்கிய நபர்கள் தொழில் அதிபர்களுக்கு போன் செய்து முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை போல,  அதே குரல் மாதிரி பேசி சிறிய உதவி தேவை,  அவசர தேவைக்கு சிறிய பணம் வேண்டும் என கூறி வாட்ஸப் நம்பரை பகிர்ந்து பணத்தை பெற்றுள்ளார்.

இதனையடுத்து,  ஆள்மாறாட்டம் செய்து ரூ.50,000 பணம் பறித்ததாக கூறி ஈரோடு
மாவட்டத்தில் 3 புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  குற்றவாளியின் மொபைல் நம்பர் மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ஸ் அப் எண் ஆகியவற்றை ட்ராக் செய்து அவர் திருச்சியில் இருப்பதை கண்டறிந்து,  கைது செய்தனர்.

தொடர்ந்து,  அவரிடம் இருந்த 2 செல்போன்,  3 சிம் கார்டுகள் மற்றும் முக்கிய பிரமுகர் விபரங்கள் அடங்கிய டைரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் அவர் ஈரோடு, திருப்பூர்,  கோவை ஆகிய பகுதிகளில் முன்னாள்,  இன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  சினிமா பாணியில் மற்றவர்கள் போலவே பல குரலில் பேசி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
ArrestCrimeErodefraudPolice
Advertisement
Next Article