"2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று வாங்கவேண்டும்" - அமைச்சர் முத்துசாமி!
ஈரோட்டில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அரசு விழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடிய மரியாதை செலுத்தப்படுகிறது. அவர் செய்த தியாகம். விடுதலைக்காக எடுத்த போராட்டங்கள் நினைவுகொள்ள இந்நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது. அவரது தியாகங்கள் மக்களிடம் இருந்த நீங்காமல் உள்ளது. தீரன் சின்னமலை நினைவு நாளில் அரசின் சார்பில் மரியாதை செலுத்துவது இந்தியாவில் உள்ள நினைத்து பார்க்க வேண்டிய நாளாக உள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுப்பதற்கு முனைப்பு காட்டுவதில்லை என மத்திய அரசு தெரிவித்திருப்பதற்கு மாநில அரசு கொடுத்த பல்வேறு திட்டங்கள் வராமல் உள்ளது. அவர்கள் சொல்லும் திட்டத்திற்கு விரைவாக நிலங்களை கையகப்படுத்தி வருகின்றோம். விவசாயிடம் இருந்து நிலைத்தை கையகப்படுத்த வேண்டியிருந்தால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்கி தான் கொடுக்கமுடியும். அடிதடி செய்து தரமுடியாது என்றும், விமான நிலையங்களுக்கு இலவசமாக நிலங்களை கொடுத்துள்ளோம்.
மாநில அரசின் வற்புறுத்தல் காரணமாக ஈரோடு-பழனி ரயில் திட்டம் சாத்தியக்கூறு இல்லை என நிறுத்தும்போது மீண்டும் இத்திட்டம் போராட வேண்டிய அவசியம் இருக்கும். கிராம புறங்களில் 2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு கட்டிட அனுமதி சான்று வாங்க வேண்டும், மீறி அனுமதியில்லாமல் கட்டினால் சீல் வைக்கப்படும் என்றும் அனுமதிக்கான கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிற்கு ஒரு சட்டத்தை அரசாங்கம் சும்மா கொண்டுவராது பாதுகாப்பிற்காக தான் கொண்டு வருகிறது.
முன்பு அனைத்துவிதமான கட்டிடங்களுக்கு அனுமதி வாங்க அலுவலகம் வர வேண்டும். ஆனால் தற்போது ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்து அவரது பணிகளை செய்து கொள்ளலாம். பத்து மாதங்களில் ஒரு லட்சம் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து கட்டிடங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இதில் உச்சநீதிமன்றம் பல கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒரு கட்டிடத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தானே தவிர சீல் வைக்க வேண்டும் என்பதற்காக இல்லை என்று தெரிவித்துள்ளார்.