For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!

09:44 PM Feb 02, 2024 IST | Web Editor
ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்
Advertisement

ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் ஓமலூரில் வீடு புகுந்து மூதாட்டியின் 5 சவரன் தங்க செயினை பறித்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.  

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள கள்ளிக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர்
கோவிந்தன்.  இவரின் மனைவி அகிலாண்டம்.   இவர்களது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமானதை தொடர்ந்து, மூத்த தம்பதி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.   இந்த நிலையில்,  மூதாட்டி அகிலாண்டம் இன்று (பிப்.02) மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

தொடர்ந்து மூதாட்டி அகிலாண்டத்திடம் பேச்சு கொடுத்த அவர்கள்,
மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினர்.
இதனால்,  அதிர்ச்சி அடைந்த அகிலாண்டம், சத்தம் போட்டு கத்தியுள்ளார்.  இதை
கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.  இதனை அறிந்த ஒரு நபர் மோட்டார் சைக்கிளில்
தப்பி ஓடினார்.  மற்றொருவர் தங்க செயினை கையில் வைத்துக்கொண்டு கடைவீதியில் ஓடினார்.

இதையும் படியுங்கள்:   ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி மனு!

பின்னாடியே துரத்தி வந்த இளைஞர்கள்,  அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து அவரை ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுப்பட்ட வாலிபர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் ஜெயிகர் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் அதிகளவில் கடன் ஏற்பட்டதும்,  அந்த கடனை அடைக்க திருட்டில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.  அவர் ஏற்கனவே ராசிபுரத்தில் ஒரு திருட்டில் ஈடுபட்டுள்ளார்.   மேலும்,  குற்றபிரிவு போலீசார் திருட்டு குறித்து வாலிபர் ஜெய்கரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே செயினை பறிக்கும் போது மூதாட்டி கழுத்தில் காயம் ஏற்பட்டதால், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement