சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர்
ராஜேஷ்குமார். இவர் திங்கள்நகர் பகுதியில் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள டாக்டர் ஒருவரிடம் ரூ.10,000 கடன் வாங்கி கொண்டு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் கொண்டு சென்ற பணத்தை எண்ணியுள்ளார். அதில் ரூ.5000 குறைந்துள்ளது. தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் பணத்தை தேடியுள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் | சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
இதுபற்றி இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் நெய்யூர் பகுதியை சேர்ந்த விஜின் (20) என்ற கல்லூரி மாணவர் இரணியல் கோர்ட்டு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது, ரூ.5000 கிடந்ததை கண்டார். அதை எடுத்து இரணியல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கல்லூரி மாணவர் ஒப்படைத்த பணம் ராஜேஷ்குமார் பணம்தான் என உறுதி செய்த பிறகு, ரூ.5000 பணத்தை போலீசார் ராஜேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த பணத்தை எடுத்து வந்து காவல் துறையிடம் ஒப்படைத்த மாணவர் விஜினின் நேர்மையை பலரும் பாரட்டினார்கள்.