For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

09:26 AM Aug 30, 2024 IST | Web Editor
கோவையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
Advertisement

பிரியாணி போட்டி நடத்தி கவனத்தை ஈர்த்த கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Advertisement

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகம் சார்பில் நேற்று முன்தினம் பிரியாணி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரை மணிநேரத்திற்குள் 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதனையறிந்த ஏராளமானோர் கடை முன் குவிந்தனர். இதில் ஆட்டிசம் பாதித்த தன் மகனின் மருத்துவ செலவுக்காக கலந்துகொண்ட, கணேசமூர்த்தி என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், போட்டி நடத்திய தனியார் உணவக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாணி போட்டி முன் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும்,  பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் இரண்டு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சம்பவத்தன்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Tags :
Advertisement