அரியலூர் | ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்!
அரியலூர் மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
அரியலூர் மாவட்டம் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கற்பகம் நிறை மாத கர்ப்பிணியான இருந்தார். கற்பகம் அவரது வீட்டில் இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் விரைவில் வந்தது. பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கற்பகத்திற்கு ஊழியர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கற்பகத்திற்கு அதிகப்படியான வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கமல விநாயகி உதவியுடன் பிரசவம் பார்த்தார். ஆம்புலன்ஸில் நடைபெற்ற பிரசவத்தில் கற்பகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது.
பிறகு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தாயும், சேயும் சேர்க்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். அவசரம்
கருதி துறிதமாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் பாரட்டு
தெரிவித்தனர்.